என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர் தாக்குதல்"
சமீபத்தில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதி திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய தற்கொலைத் தாக்குதலை இந்த சம்பவம் நினைவுபடுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இன்று வெடித்த காரிலும் வெடிகுண்டுகள் மற்றும் ரசாயன பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. காரில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #BlastInCar #JKAccident #PulwamaAttack #CRPFConvoy
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.
இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். இந்தியா போர் தொடுத்தால் தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தானும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் நேற்று கூட்டினார். கூட்டத்தில் ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வா, துணை தளபதிகள், உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், நிதித்துறை, ராணுவத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, நாட்டின் பாதுகாப்பு அம்சம், போர் வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கை சர்வதேச கோர்ட்டில் எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும் திறனும் பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நடந்த சம்பவம் (புலவாமா தாக்குதல்) பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்தியாவிடம் இருந்து ஆக்கபூர்வமான பதில் வரும் என்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாராவது பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதாக இந்திய அரசு தக்க ஆதாரங்களை கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #Pulwamaattack #ImranKhan
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் இல்லத்துக்கு இன்று சென்ற பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஏற்கனவே மாநில அரசின் சார்பில் 7 லட்சம் ரூபாய் கருணைத்தொகையும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும் குல்விந்தர் சிங்கின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய சந்திப்புக்கு பின்னர் குல்விந்தர் சிங்கின் வாரிசு (மனைவி அல்லது பெற்றோர் இறக்கும்வரை) அவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், அனந்த்புர் சாஹிப் நகரில் இருந்து குல்விந்தர் சிங் வாழ்ந்த கிராமத்தை இணைக்கும் சாலைக்கு அவரது நினைவாக குல்விந்தர் சிங் சாலை என பெயரிடப்படும் எனவும் முதல் மந்திரி வாக்குறுதி அளித்தார். அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PunjabCM #monthlypension #Pulwamaattack #CRPFpersonnel #KulwinderSingh
இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.
மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.
சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார்.
பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கிறது.
வயநாடு, லக்கிடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
வசந்தகுமார் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் பலியாகி உள்ளார்.
அவர், இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார். தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPFAttack
மும்பை:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒழித்து கட்ட ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றும் தெரிவித்தார். மராட்டிய மாநிலம் யவதாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக இருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும் பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு மோடி பேசினார். #PMModi #PulwamaAttack #CRPF
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதினான். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.
டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.
இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்